என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Babar Azam"
- பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
- தற்போது அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
லாகூர்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது.
முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியால் எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன் குவித்தும் தோற்றது அந்த அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மோசமான பந்து வீச்சு, பீல்டிங் இதற்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இந்த தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
வாசிம் அக்ரம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. 282 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே இருந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு மேற்கொள்ளவில்லை. நவீன கிரிக்கெட் உலகில் நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் கேட்ச் பிடிப்பது எப்படி? பவுண்டரியை எப்படி தடுக்க முடியும்?
அக்யூப் ஜாவித்: பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவருக்கு பதிலாக ஷகின் ஷா அப்ரிடியை டி 20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியின் எதிர்காலத்துக்கு இது நல்லது. பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்க தவறிவிட்டார்.
மிஸ்பா-உல்-ஹக்: பாபர் அசாசம் அணியை வழிநடத்துவது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவரின் பீல்டிங் வியூகம், பந்து வீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக கேப்டன் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போல் இருந்தது. ஹாரிஸ் ரவூப்புக்கு பவர் பிளேயில் பந்துவீச கொடுத்ததால் ஒரு சில பவுண்டரிகளால் அவரது நம்பிக்கை உடைந்துவிட்டது. இதுவும் தவறான முடிவாகும்.
ரமீஸ் ராஜா, ரஷீத் லத்தீப், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், மொயின்கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தையும், கேப்டன் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது
- கோலி தருவதை அசாம் மகிழ்ச்சியுடன் பெறும் காட்சிகள் வைரலானது
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ICC) 2023 வருட ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இத்தொடரின் போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இம்முறையும் வெற்றி பெற்றதை அடுத்து 8-வது முறையாக இந்த பெருமையை இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தோல்வியுற்றதால் அந்நாட்டில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆடிய விதத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணி வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தனது கையொப்பமிட்ட இந்திய அணி டி-ஷர்டுகளை (jersey) பரிசாக அளித்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் பாபர் அசாம் பெற்று கொண்டார்.
இக்காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணியினரின் தோல்வியில் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் பாபர் அசாம், கோலியிடமிருந்து டி-ஷர்ட் வாங்குவதை தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தோல்வியில் மக்கள் வருந்தும் போது, பாபர் அசாம் இவ்வாறு செய்தது தவறு. அவர் இதை செய்திருக்க கூடாது. தனது உறவினர் மகனுக்காக கோலியிடம் டி-ஷர்ட்கள் வாங்க பாபர் நினைத்திருந்தால் கூட கேமிராக்களின் பார்வையில் படாமல் தங்கள் அறைக்கு சென்ற பிறகு அவரை தனியே சந்தித்து வாங்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெல்வதும் தோற்பதும் இயல்பான சம்பவங்கள் என்றும் இரு அணி வீரர்களின் நட்பான பரிமாற்றங்கள், போட்டியை போட்டியாக பார்க்கும் மனப்பக்குவம் மக்களிடம் வளர வளர இது போன்ற செயல்கள் சரியாக புரிந்து கொள்ளப்படும் என இச்சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம்.
- ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்க முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இமாமிற்கும் எனக்கும் பார்ட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம். ஆனால் எங்களால் சரியாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்து கொண்டனர். அப்போது தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli gifted his signed shirt to Babar Azam ♥️ as a Good well Gesture ?? #INDvsPAK | #INDvPAK |#PAKvIND | #PAKvsIND | #ViratKohli? | #BabarAzam? | #BabarAzam | #CWC23 |#Ahmedabad #IndiaVsPakistan pic.twitter.com/zx4xV3XYDg
— Vikrant Gupta ? (@VikrantGupta75) October 14, 2023
- பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
- முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கையிடம் தோற்று பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடையே மோதல் இல்லை என்று அங்கு அணியின் மூத்த வீரர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கூறும்போது, அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது.
அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என்றார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவரில் 252 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
அந்த அணியின் குசால் மெண்டிஸ் 91 ரன்னில் அவுட்டானார். சரித் அசலங்கா கடைசி வரை ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:
எங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தது. எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.
இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.
இலங்கை அணி பேட்டிங் ஆரம்பத்திலும் சரி, ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டனர்.
கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று தோல்வியை தழுவினோம் என தெரிவித்தார்.
- ஆசிய கோப்பையில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார்
- ஒருவர் சிறப்பாக விளையாடும்போது, அவரது திறமையை அறிய அனைவரும் விரும்புவர்
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 84 ஆகும்.
இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மான் கில் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியும் அவரை பாராட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் விளையாட்டு, பின்பற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, ''ஆம். நிச்சயமாக நாங்கள் அவரை பின்பற்றுவோம். ஒரு வீரர் நன்றாகச் செயல்படும்போது, அவர்கள் ஏன் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? அவர்களின் சிறப்பு என்ன? என்பதைக் கண்டறிய அனைவரும் அவர்களை பார்க்கிறார்கள். . பாபருக்கும் அதுவே பொருந்தும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், நாங்கள் அனைவரும் அவரைப் போற்றுகிறோம்'' என்றார்.
- கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம்.
- நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது.
முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இன்று சூப்பர் 4-ல் 2-வது போட்டி நடைபெறுகிறது. இதில் வங்காளதேசம் மற்றும் இலங்கை மோதுகிறது. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம். நாங்கள் டெஸ்ட் விளையாடினோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரில் விளையாடினோம். அதன் பிறகு எல்.பி.எல். விளையாடி உள்ளோம். தொடர்ச்சியாக இங்கு விளையாடி வருவதால் இந்தியாவை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.
நாங்கள் புதிய பந்தில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுகிறோம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது திட்டம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை. ஆனால் நாங்கள் அவற்றைப் பெறவில்லை.
மிடில் ஓவர்களில் சொதப்பினாலும் போட்டியை நன்றாக முடிப்பதை நீங்கள் காணலாம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது ஒரு அணியின் கூட்டு முயற்சி. போட்டியில் யாராவது தோல்வியுற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் அதை சரி செய்கிறார்கள். நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
ஹம்பன்டோட்டா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாகவும் கேப்டனாக 2-வது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
- விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார்.
- அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் விராட் கோலியை விட பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேனாக இருப்பதால் இம்முறை 2023 உலக கோப்பையில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல நேரங்களில் சில நட்சத்திர வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையும் கேரியரின் கடைசி சில வருடங்களாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் வருவீர்கள். இம்முறை அது இந்தியாவுக்கு நடக்கிறது என்று உணர்கிறேன்.
குறிப்பாக நட்சத்திர வீரர்கள் அணியை விட பெரியவர்களாக உருவெடுக்கும் போது முக்கிய தருணங்களில் அணி நிர்வாகத்துக்கு சரியான முடிவை எடுப்பதில் கடினம் ஏற்படுகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தானுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவால் எவ்வளவு நாட்கள் விளையாடி விட முடியும்? அதே போல விராட் கோலி பற்றிய கருத்துக்கள் என்ன? ஒருவேளை நீங்கள் விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்டால் ஒரு சீசனில் அபாரமாக செயல்படும் அவர் மற்றொரு சீசனில் திண்டாடுகிறார்.
அதாவது விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார். அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை. அதனால் தான் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்கிறேன்.
என அவர் கூறினார்.