என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 போட்டி: ரோகித் சர்மா சாதனையை முறியடித்த பாபர் அசாம்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார்.
- பாபர் அசம் 130 டி20 போட்டியில் 4234 ரன் எடுத்துள்ளார்.
லாகூர்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.2 ஓவரில் 110 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார். 9-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். பாபர் அசம் 130 ஆட்டத்தில் 4234 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 4231 ரன்னுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.
ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-
பாபர் அசாம் -130 போட்டிகளில் 4232*
ரோகித் சர்மா - 159 போட்டிகளில் 4231
விராட் கோலி - 125 போட்டிகளில் 4188
ஜோஸ் பட்லர் - 144 போட்டிகளில் 3869






