search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mike Hesson"

    நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசனை ஹெட் கோச்சாக நியமித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #KXIP #IPL2018
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11 வருடமாக ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது. ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    அதன்பின் அந்த அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அடிக்கடி வீரர்களையும், பயிற்சியாளரையும் மாற்றி மாற்றி பார்க்கிறது. ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. கட்நத சீசனில் அஸ்வினை கேப்டனாகவும், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ச்-ஐ பயிற்சியாளராகவும் நியமித்தது. அத்துடன் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் விளையாடினார்கள். சேவாக் ஆலோசகராக உள்ளார்.

    முதலில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 2-வது கட்டத்தில் அதிக அளவில் வெற்றிகளை குவிக்க இயலவில்லை. இதனால் முதல் நான்கு இடங்களை பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.



    அடுத்த வாரம் மைக் ஹெசன் இந்தியா வருகிறார். அப்போது இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். 2019 உலகக்கோப்பைக்குப் பின் வரை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டிய மைக் ஹெசன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டி20 லீக்கில் எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருந்ததில்லை. ஆனால் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக திறம்பட செயல்பட்டுள்ளார். இவரது தலைமையைில் 2015-ல் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 59 டெஸ்ட் போட்டியில் 30-ல்  வெற்றியை ருசித்துள்ளது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மைக் ஹஸ்சன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். #NewZealand #BlackCaps #MikeHesson
    நியூசிலாந்து:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    மைக் ஹஸ்சனுக்கு அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த முடிவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ளது. ஜூலை 31-ந்தேதியில் இருந்து மைக் ஹஸ்சனின் ராஜினாமா அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் மைக் ஹஸ்சன் பதவி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #NewZealand #BlackCaps #MikeHesson
    ×