என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் நீக்கம்- பயிற்சியாளர் விளக்கம்
    X

    ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் நீக்கம்- பயிற்சியாளர் விளக்கம்

    • சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.
    • டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.

    டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றி பெற முடியும்.

    என்று மைக் ஹேசன் கூறியுள்ளார்.

    Next Story
    ×