என் மலர்
நீங்கள் தேடியது "New Zealand"
- இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும்.
- பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தியா- நியூசிலாந்து இடையில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA- Free Trade Agreement) ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் சுதந்திரமான மற்றும் நியாயமான ஒப்பந்தம் இல்லை என நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக தங்களுடைய கட்சி எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில் "வருந்தத்தக்க வகையில் இது நியூசிலாந்துக்கான மோசமான டீல். இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும். நியூசிலாந்தின் முக்கியமான பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. விவசாயிகளிடமும் கிராமப்புற சமூகங்களிடமும் இந்த முடிவை நியாயப்படுத்துவது சாத்தியமற்றது.
நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பால் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 13.94 பில்லியன் டாலராகும். இது நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதமாகும். இந்த ஒப்பந்தம் முக்கிய பால் பொருட்களை விலக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றார்.
மேலும், குடிபெயர்தல் விவகாரத்தில் நியூசிலாந்து நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த 2-வது போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் அவர் 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
- 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த 15-வது லீக்கில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் இலங்கையின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு (53 ரன்), நிலக்ஷிகா சில்வா (55 ரன், 28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.
ஆனால் இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 16-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 75 ரன்களும் பெவோன் ஜேக்கப்ஸ் 44 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் க்வேனா மபாகா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 18.3 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.
- எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.
- நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து குடிவரவு துறை (Immigration) பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடியேற்றத் தகவல்களைக் கேட்டு இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் திறக்கப்படுவதில்லை என்றும், அவை Spam (போலி) ஆக கருதப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.
ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது" என்று கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
"அமைச்சர் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும்.
- கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது.
ஆக்லாந்து:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதன் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை தோற்கடித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும். கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண்பது இது 3-வது முறையாகும்.
- அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கங்கள் சுமார் 15 முறை பதிவாகியுள்ளன.
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்த அறிவிப்பை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தட்டுகளுக்கு இடையேயான அதிக ஒருங்கிணைப்பு விகிதங்கள் காரணமாக, ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு விளிம்பு உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்று என அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில், 3000 கிலோமீட்டர்கள் நீளமுள்ள ஆஸ்திரேலியா-பசிபிக் தட்டு எல்லை மெக்குவாரி தீவின் தெற்கில் இருந்து தெற்கு கெர்மடெக் தீவு வரை நீண்டுள்ளது.
1900 ஆம் ஆண்டு முதல், நியூசிலாந்து அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் சுமார் 15 முறை பதிவாகியுள்ளன. நியூசிலாந்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 1931 இல் பதிவானது. இந்த நிலநடுக்கம் 256 பேரின் உயிரைப் பறித்தது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் வடக்கில் அமைந்துள்ள ஹாக்ஸ் பே பகுதியில் பதிவானது.
- ரைசினா மாநாட்டுக்காக நியூசிலாந்து பிரதமர் இந்தியா வந்தார்.
- கிறிஸ்டோபர் லக்சனை புதுதில்லியில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடி உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது, "இன்று, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை புதுதில்லியில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நமது பகிர்ப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் நமது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஒரு பயனுள்ள விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்தார்.
டெல்லியில் நடக்கும் ரைசினா மாநாட்டுக்காக நியூசிலாந்து பிரதமர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பிரதமர் மோடி கவலை.
- பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண்மை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண்மை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பின்போது நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி கிறிஸ்டோபர் லக்சனிடம் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதில் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்படும் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






