என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2-வது போட்டியில் மட்டுமல்ல... ஒருநாள் தொடரில் இருந்தே மிட்செல் விலகல்
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






