என் மலர்

  நீங்கள் தேடியது "ODI Cricket"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டுமினிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. #AUSvSA
  தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

  ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.

  இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

  ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோர் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 39 போட்டியில் 1573 ரன் எடுத்து உள்ளார். 9 ஆட்டத்தில் அவுட் இல்லை என்பதால் சராசரி 52.43 ஆகும். 4 சதமும், 11 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்கள் குவித்துள்ளார்.

  தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 போட்டியில் அவுட் இல்லை என்பதால் அவரது சரராசரி 60.30 ஆகும். 4 சதமும், 9 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 127 ரன் குவித்துள்ளார்.

  தற்போது நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 187 ரன்கள் தேவை. 5 ஆட்டத்தில் கோலியால் இந்த ரன்னை எடுக்க இயலும்.

  ராகுல் டிராவிட் 1348 ரன்னும் (40 போட்டி), கங்குலி 1142 ரன்னும் (27 போட்டி) அசாருதீன் 998 ரன்னும் (43 போட்டி) எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.  தெண்டுல்கர், கோலி, டிராவிட், கங்குலி ஆகிய 4 இந்திய வீரர்களே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.

  இவர்களது வரிசையில் டோனி இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 101 ரன் தேவை. டோனி 33 போட்டியில் விளையாடி 899 ரன் எடுத்து உள்ளார்.

  5 ஒருநாள் போட்டியில் 101 ரன்களை எடுப்பதன் மூலம் அவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1000 ரன்னை கடப்பார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்கள் தவறானது என்பதை நிரூபிப்பார் என்று கவுதம் காம்பிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni
  இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. விக்கெட் கீப்பருடன் தலைசிறந்த ஃபினிஷராகவும் திகழ்ந்தார். வயதாக வயதாக எம்எஸ் டோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவரது தொய்வாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை மிடில் ஆர்டர்கள் சரியாக அமையாததாலும் இந்தியா முக்கியமான ஆட்டத்தில் திணறி வருகிறது.

  டோனியின் ஆட்டம் எப்படி இருந்தாலும் 2019 உலகக்கோப்பை வரை டோனி விளையாடுவார் என்று தேர்வுக்குழு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

  இதனால் டோனிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால், டோனிதான் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த் முதன்மை பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

  இந்நிலையில் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் சிறப்பான ஆட்டம்தான் முதல் அளவுகோல் என்று டோனியின் ஆட்டம் குறித்து கவுதம் காம்பிர் சூசகமாக தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘சிறப்பான ஆட்டம் (Performance) என்ற ஒரே அளவுகோலால் மட்டுமே அணியில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்க முடியும். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், இந்திய அணியில் ஒரு அங்கமாக பங்கேற்க இயலாது.

  வயது ஒரு பிரச்சனை அல்லை. டோனி சிறப்பாக விளையாடி, விமர்சனங்கள் தவறானவை என்பதை நிரூபிக்க விரும்புவார் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. #MSDhoni #Retirement
  புதுடெல்லி:

  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.  லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

  தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்படுகிறது. #ENGvIND
  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுகிறது.

  இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது.

  இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஜூலை 3-ந்தேதி நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1-ந்தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.

  இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

  வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் மணிக்கு தொடங்குகிறது.

  இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் போட்டி விவரம் வருமாறு:-

  ஜூலை.3:- முதல் 20 ஓவர் போட்டி (மான்செஸ்டர்) இரவு 10.00 மணி.

  ஜூலை.6:- இரண்டாவது 20 ஓவர் போட்டி (கார்டிப்)- இரவு 10.00 மணி.

  ஜூலை.8:- மூன்றாவது 20 ஓவர் போட்டி (பிரிஸ்டல்) மாலை 6.30 மணி.

  ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி (நாட்டிங்காம்) மாலை 5 மணி.

  ஜூலை.14:- இரண்டாவது ஒருநாள் போட்டி (லண்டன்) மாலை 3.30.

  ஜூலை.17:- கடைசி ஒருநாள் போட்டி (லீட்ஸ்) மாலை 5 மணி.

  ஆகஸ்ட் 1-5: முதல் டெஸ்ட் (பர்மிங்காம்).

  ஆகஸ்ட் 9-13: இரண்டாவது டெஸ்ட் (லார்ட்ஸ்).

  ஆகஸ்ட் 18-22: மூன்றாவது டெஸ்ட் (நாட்டிங்காம்)

  ஆகஸ்ட் 30-செப்.3: நான்காவது டெஸ்ட் (சவுத்தம்டன்)

  செப் 7-11: கடைசி டெஸ்ட் (ஓவல்)

  டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
  ×