search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2023 ODI World Cup"

    • ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது.
    • ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்.

    இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான உத்தேச 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    இந்த அணி வருகின்ற தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசேனே இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, இதில் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார். அதே நேரத்தில், கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக, மிட்செல் மார்ஷ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி:-

    டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க் , ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லிஸ்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணி:-

    மாட் ஷார்ட், டிம் டேவிட்ஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜான்சன், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட்.

    • இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும்.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

    2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் கிட்டத்தட்ட 45 நாட்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் இந்த முறை உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும். அதிலேயும் பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியாவும் 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்த நிலையில், இந்த உலக கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த மனிதர், அவர் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவுகிறார்.

    இதே போன்று பாகிஸ்தானிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.

    பிரிட்ஜ்டவுன்:

    ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    50 ஓவர் போட்டிக்கான அடுத்த உலகக்கோப்பையை இந்தியா 2023-ம் ஆண்டு நடத்துகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    4-வது முறையாக உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இதற்கு முன்பு 1987, 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்தது. 2011-ல் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக விளையாடும்.

    2020-2023 வரை நடைபெறும் ஐ.சி.சி. உலகக்கோப்பை சூப்பர் லீக் முடிவில் 7 நாடுகள் நுழையும். அதன்படி இங்கிலாந்து தகுதி பெற்று விட்டது. இதில் இருந்து இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    ஜிம்பாப்வேயில் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை நடைபெறும் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து 2 நாடுகள் தகுதி பெறும்.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி சூப்பர் லீக் மூலம் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக நுழைவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் அந்த அணி மெதுவாக பந்து வீசியது. இதனால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தது. குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால் அந்த அணியின் 2 சூப்பர் 'லீக்' புள்ளிகள் குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.

    ×