search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2 புள்ளிகள் குறைப்பு- உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதில் பாதிப்பு
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2 புள்ளிகள் குறைப்பு- உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதில் பாதிப்பு

    • உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.

    பிரிட்ஜ்டவுன்:

    ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    50 ஓவர் போட்டிக்கான அடுத்த உலகக்கோப்பையை இந்தியா 2023-ம் ஆண்டு நடத்துகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    4-வது முறையாக உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இதற்கு முன்பு 1987, 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்தது. 2011-ல் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக விளையாடும்.

    2020-2023 வரை நடைபெறும் ஐ.சி.சி. உலகக்கோப்பை சூப்பர் லீக் முடிவில் 7 நாடுகள் நுழையும். அதன்படி இங்கிலாந்து தகுதி பெற்று விட்டது. இதில் இருந்து இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    ஜிம்பாப்வேயில் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை நடைபெறும் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து 2 நாடுகள் தகுதி பெறும்.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி சூப்பர் லீக் மூலம் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக நுழைவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் அந்த அணி மெதுவாக பந்து வீசியது. இதனால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தது. குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால் அந்த அணியின் 2 சூப்பர் 'லீக்' புள்ளிகள் குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பைக்கு நேரடியாக நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலை வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்படுகிறது.

    Next Story
    ×