என் மலர்
நீங்கள் தேடியது "கோலி"
- ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார்.
38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது.
- இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்
இந்திய கிரிக்கெட் அணி யின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக பணியாற்றியவர் ரோகித்சர்மா. அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தனர்.
ரோகித் சர்மா, வீராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தது ஆச்சரியமானது. ஏனென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் இருவரது ஆட்டமும் மோசமாக இருந்ததால் தொடர் முடிந்த பிறகே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து பயணத்துக்கு சற்று முன்பு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
கோலி, ரோகித் சர்மா இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் முடி வில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் கோலி, ரோகித் சர்மா ஓய்வு தொடர் பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தாவது:-
ஓய்வு பெறுவது ஒரு வீரரின் சொந்த முடிவு. கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்த முடியாது.
நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ரோகித் சர்மா, வீராட் கோலி இல்லாததை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓய்வு பெறும் முடிவை இருவரும் தாங்களாகவே எடுத்தனர். எந்த வீரரையும் ஓய்வு பெற சொல்லக்கூடாது என்பது பி.சி.சி.ஐ. யின் கொள்கையாகும். ஓய்வு அவர்களின் விருப்பமே. ஓய்வு பெறுமாறு அவர்களை கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்த வில்லை.
அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்போம். நாங்கள் எப்போதும் அவர்களை புகழ்பெற்ற பேட்ஸ்மேன்களாக கருதுவோம். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது எங்களுக்கு மிகவும் நல்லது.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
- பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
- ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.
அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.

விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை.
இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ரசிகர்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளனர்.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
- இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.
இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.
- கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்தார்.
- கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பாடகர் ராகுல் வைத்யா, இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி எதற்காக இன்ஸ்டாகிராமில் என்னை பிளாக் செய்தார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. எப்போதாவது ஏதாவது நடந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை.
ராகுல் வைத்யா பிரபலமான பாடல் போட்டியான இந்தியன் ஐடலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தும் , இந்தி பிக் பாஸ் சீசன் 14 இல் போட்டியாளராக பங்கேற்றும் மக்களிடையே பிரபலமானவர்.
அவர் 2021 இல் தொலைக்காட்சி நட்சத்திரமான திஷா பர்மரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போது விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
- என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
- கடினமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாக அவர் வந்தார்.
மெல்போர்ன்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் அதிரடி ஆட்டமே காரணம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் கோலியின் ஆட்டத்தை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்ட்ரகிராம் வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும்! என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் வெளியே வந்தார். உன்னை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.








