என் மலர்
நீங்கள் தேடியது "ரோகித்"
- இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
- சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன்.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை சென்னை, மதுரையில் நடக்கிறது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. 28-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர் கொள்கிறது.
உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஏற்கனவே சென்னை வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், அர்ஜென்டினா அணிகளும் வந்துள்ளன.
இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோகித், ஜூனியர் உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனக்கு எந்தவித நெருக்கடியும் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இயல்பாகவே இருக்கிறேன். அணியில் 4 முதல் 5 சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் கடந்த காலத்தில் கேப்டனாக பணியாற்றினார்கள். நெருக்கடியை எப்படி கையாள்வது என்பதை பற்றி பயிற்சியாளர் எங்களுக்கு அறிவுறுத்துவார்.
சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஜூனியர் உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு ரோகித் கூறி உள்ளார்.
பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கூறும் போது, கேப்டன் ரோகித் ஒரு அற்புதமான வீரர். அணியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். 4 சீனியர் வீரர்களில் அவர் கேப்டனாக உள்ளார். அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். கேப்டனாக அவர் தேர்வானது கூட்டு முடிவு என்றார்.
21 வயதான ரோகித் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் டப்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 2022-ம் ஆண்டு ஜூனியர் அணியில் இணைந்தார். ஆசிய கோப்பை மற்றும் சுல்தான் ஜோகா் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இதனால் டிராக்பிளிக்கரான அவர் சில சீனியர்களை விட கேப்டனாக தேர்வு பெற்றார்.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி திருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, மதுரை மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஹாக்கி திருவிழாவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.
- இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்
இந்திய கிரிக்கெட் அணி யின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக பணியாற்றியவர் ரோகித்சர்மா. அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தனர்.
ரோகித் சர்மா, வீராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தது ஆச்சரியமானது. ஏனென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் இருவரது ஆட்டமும் மோசமாக இருந்ததால் தொடர் முடிந்த பிறகே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து பயணத்துக்கு சற்று முன்பு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
கோலி, ரோகித் சர்மா இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் முடி வில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் கோலி, ரோகித் சர்மா ஓய்வு தொடர் பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தாவது:-
ஓய்வு பெறுவது ஒரு வீரரின் சொந்த முடிவு. கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்த முடியாது.
நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ரோகித் சர்மா, வீராட் கோலி இல்லாததை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓய்வு பெறும் முடிவை இருவரும் தாங்களாகவே எடுத்தனர். எந்த வீரரையும் ஓய்வு பெற சொல்லக்கூடாது என்பது பி.சி.சி.ஐ. யின் கொள்கையாகும். ஓய்வு அவர்களின் விருப்பமே. ஓய்வு பெறுமாறு அவர்களை கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்த வில்லை.
அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்போம். நாங்கள் எப்போதும் அவர்களை புகழ்பெற்ற பேட்ஸ்மேன்களாக கருதுவோம். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது எங்களுக்கு மிகவும் நல்லது.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
- பும்ரா பந்துவீச்சில் கருண் நாயர் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசினார்
- ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார்.
ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.
குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார்.
ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார். இதனையொட்டி டைம் அவுட் நேரத்தில் கருண் நாயரிடம் பும்ரா வாங்கிக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் கருண் நாயர் பேசினார்.
இந்த வாக்குவாதத்திற்கு நடுவே ரோகித் மைதானத்தில் சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
- ரோகித் சர்மா விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஐ.சி.சி. வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.
- எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
- அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
அதில், "அருமையான வெற்றி. என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே. ஒரு அற்புதமான வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன். எனது முதல் ஸ்க்ரீன் ரெக்கார்டாக இதை உருவாக்கியவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவல்:
இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.






