என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி - கோலி, கில் அரைசதம்... 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
    X

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி - கோலி, கில் அரைசதம்... 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

    • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி
    • நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

    Next Story
    ×