என் மலர்tooltip icon

    உலகம்

    அதிக வேலைவாய்ப்புகள், வருமானம்: இந்திய உடனான வர்த்தக ஒப்பந்தத்தை நியாப்படுத்திய நியூசிலாந்து பிரதமர்
    X

    அதிக வேலைவாய்ப்புகள், வருமானம்: இந்திய உடனான வர்த்தக ஒப்பந்தத்தை நியாப்படுத்திய நியூசிலாந்து பிரதமர்

    • இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனது அரசாங்கத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை.
    • அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உருவாக்கும்.

    இந்தியா- நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறைவு பெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி- நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தொலைபேசியில் உரையாடினர்.

    இதைத்தொடர்ந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இருநாட்டு தலைவர்களும் அறிவித்தனர்.

    இந்த ஒப்பந்தம் மூலம் இருநாடுகளின் விவசாயிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது, அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    இதற்கிடையே இந்தியா- நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து வெளியுறவு மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் சுதந்திரமானதோ, நியாயமானதோ அல்ல. துரதிருஷ்டவசமாக இது நியூசிலாந்துக்கு ஒரு மோசமான ஒப்பந்தம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனது அரசாங்கத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஆகும். எதிர்கால வளர்ச்சி நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.

    எங்கள் முதல் பதவிக் காலத்திலேயே இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவோம் என்று கூறினோம். அதை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்திய நுகர்வோருக்கு கதவைத் திறப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் தனது அரசாங்கத்தின் பரந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×