என் மலர்
கிரிக்கெட் (Cricket)

16 ரன்னில் அவுட்.. 1000 நாட்களை கடந்து செல்லும் பாபர் அசாமின் சோக கதை
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர். அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாபர் அசாம் களமிறங்கினார். சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக ஆடினார். அவர் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அவட் ஆனதும் சுற்றியிருந்த ரசிகர்கள் கவலையுடன் சோகத்துடன் காணப்பட்டனர்.
அவர் டெஸ்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 1000 நாட்கள் மேல் ஆகிவிட்டது. பாபர் அசாம் டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதம் அடித்தது 2022 டிசம்பர் 26 அன்று, நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடந்த போட்டியில் 161 ரன்கள் எடுத்தார்.
அன்றிலிருந்து அவர் டெஸ்ட் சதம் அடிக்கவில்லை. 2025 அக்டோபர் வரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.






