என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: மேக்ஸ்வெல் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு
    X

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: மேக்ஸ்வெல் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு

    • ஆஸ்திரேலியா- நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது.

    இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    மேலும் அவருக்கு பதிலாக ஜோஷ் பிலிப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    Next Story
    ×