என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro.. சாஹல் நெகிழ்ச்சி
- மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.






