என் மலர்
செய்திகள்

மேத்யூ வேட் - மார்கஸ் ஸ்டோனிஸ் ஷூவில் மதுபானம் குடித்த காட்சி
வெற்றி கொண்டாட்டத்தில் ஷூவில் மதுபானம் குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வார்னர் ஆட்டமிழந்தார்.
மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.
வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
How's your Monday going? 😅#T20WorldCuppic.twitter.com/Fdaf0rxUiV
— ICC (@ICC) November 15, 2021
இதையும் படியுங்கள்...அடுத்த ஆண்டு ஊசி தட்டுப்பாடு ஏற்படும் - உலக சுகாதார நிறுவனம் தகவல்
Next Story