டி20 உலக கோப்பை - 109 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து அசத்திய யு.ஏ.இ. அணியின் ஜுனைத் சித்திக்

முதலில் ஆடிய இலங்கை அணி 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்னில் சுருண்டது.
ஜுனைத் சித்திக்
ஜுனைத் சித்திக்
Published on

சிட்னி:

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்களில் சுருண்ட் பரிதாபமாக தோற்றது.

இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது 109 மீட்டர் தூரம் சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com