search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்  கற்பனை செய்ய முடியாதது- மிட்செல் மார்ஷ் பேட்டி
    X

    (கோப்பு படம்)

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கற்பனை செய்ய முடியாதது- மிட்செல் மார்ஷ் பேட்டி

    • இதை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை.
    • விராட் கோலி உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.


    இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×