search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "richard kettleborough"

    • நடுவருக்கு எதிராக சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
    • 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். சுப்மன் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உலகின் சிறந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது சரியான கேட்ச் என்று நினைத்தேன். கிரீன் கேட்ச் பிடித்ததும் அதிகமாக கத்துவார். நாங்கள் வீரர்கள் மட்டுமே. நாங்கள் களத்தில் இருக்கிறோம். எங்களால் அதை சரியாக கூறமுடியாது. எனவே நாங்கள் அதை நடுவரின் கைகளில் விட்டுவிட்டோம். அவர் உலகின் சிறந்த நடுவர் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. அது அவுட்டா இல்லையா என்பது அவருக்கு தெரியும்.

    அவருக்கு விதி புத்தகங்கள் தெரியும். அவர் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்த்திருப்பார். 100 மீட்டர் தொலைவில் இருந்து பெரிய திரையில் பார்க்கும் உணர்ச்சிமிக்க ரசிகர்களை விட அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் கூறினார்.

    ×