என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டான்சிங் ரோஸ்.. வீடியோ வெளியிட்டு ரிஸ்வானை கலாய்த்த பிரபல நடுவர்
    X

    டான்சிங் ரோஸ்.. வீடியோ வெளியிட்டு ரிஸ்வானை கலாய்த்த பிரபல நடுவர்

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரிஸ்வான் 27 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்த போட்டியிலும் நியூசிலாந்து அனி எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியில் பாகிஸ்தான் அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் 27 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்களின் பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வீடியோ வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

    அந்த வீடியோவிற்கு பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வானின் நடனமாடும் வீடியோ என தலைப்பிட்டுள்ளார்.அவர் கூறுவது போல ரிஸ்வான் பேட்டிங் செய்தவதற்கு பதிலாக டான்ஸ் தான் ஆடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியது.

    அதனையடுத்து அவர் களநடுவராக வந்தாலே இந்தியா தோல்வியை சந்திக்கும் என்ற அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு நடுவர் ரிச்சர்ட் வந்தும் இந்தியா வெற்றி பெற ஆரம்பித்து விட்டதால் அவர் குறித்து செய்திகள் வருவது குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×