search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Captain"

    • அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.
    • ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்.

    நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இடநெருக்கடி காரணமாக விஜயகாந்தின் உடல் தே.மு.தி.க கட்சி அலுவலகத்திலிருந்து அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு வந்துபோது அளித்த பேட்டியில், "அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது வருந்தினேன். எனக்கு சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று கூறினார்.

    இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, "கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் நாமம் வாழ்க" என்று பேசினார்.

    • விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
    • நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

    தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    விஜயகாந்தின் உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத் திடலில் வைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக, பிரேமலாத, சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    பிறகு, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு, நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    ராஜாஜி அரங்கில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார்.
    • 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்திற்கு பொருத்தமான விஜயராஜ் என்னும் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மகனாக பிறந்தார். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.

    பிரேமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    சிறு வயது முதலே சினி மாமீதான ஈர்ப்பும், குறிப் பாக எம்.ஜி.ஆரை கலைக்கடவுளாக வழிபட்டு வந்ததன் காரணமாக பல பள்ளிகள் மாறியும் படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது. 10-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்புக்கு முடிவு கட்டினார். அதேநேரம், தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சிகளாக தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் செயல்பட்டு வந்த தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

    தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புக ளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தை பல்வேறு சவால்களுடன் தொடங்கினார்.

    திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். `சட்டம் ஒரு இருட்டறை', `தூரத்து இடி முழக்கம்', `அம்மன்கோவில் கிழக்காலே', `உழவன் மகன்', `சிவப்பு மல்லி' என வெற் றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாய கனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

    • தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன் " என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி, சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வருகிற 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நடிகர் ஆர்யா சென்று கேப்டன் திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகிறார். கோவையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கேப்டன் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா பார்த்து, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

    கேப்டன்

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு ஸ்பெஷல் மூவி என்றால் அது ராஜா ராணி தான். அந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று வித்தியாசமான முறையில் தற்போது கேப்டன் படத்தை எடுத்துள்ளோம். அனைவரும் திரையரங்குக்கு வந்து திரைப்படத்தை காண வேண்டும்.

    ஆர்யா

    இந்த திரைப்படம், ஆர்மி பேக் கிரவுண்ட்டை மையமாக கொண்டு கதை தயாரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கும். பொதுமக்களுக்கு நல்ல கதைகள் பிடிக்கிறது. நல்ல கதைகளை விரும்பி பார்க்கின்றனர் என்றார். 

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன்

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதையடுத்து கேப்டன் படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கேப்டன் படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்த கதை வேறு யாரும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக பண்ணி இருப்பேன் என்று சொல்ல முடியாது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுடன் முன்பு பணியாற்றிய அனுபவங்களை வைத்து நான் அவரை நம்பினேன். அவரால் இந்த படம் இயக்க முடியும் என்று நினைத்தேன் அதனால் இந்த படத்திற்கு ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் ஆர்யா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன்

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் நெல்லை வந்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில படத்திற்கு இணையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது தற்போது தமிழகத்தில் புது முயற்சியாக இருக்கும்.

    கேப்டன்

    சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகவும் இருக்கும். அதிக பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. காடுகளில் அதிக அதிக நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக 100 நாட்கள் கிடைக்கும் வசூல் இரண்டு நாட்களிலேயே கிடைத்து விடுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன்

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேப்டன்

    இதையடுத்து இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஆர்யாவிடம் பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், " அரசியலில் வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை" என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐஸ்வர்யா லக்‌ஷ்மி - ஆர்யா

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, ''நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும்போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்.

    ஐஸ்வர்யா லக்‌ஷ்மி - ஆர்யா

    இயக்குனர் சக்தியின் சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரம்மாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆக்‌ஷன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை'' என்றார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன்

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் பேசியதாவது, "நான் ஆர்யாவிடம் முன்பே கூறியிருந்தேன் பாஸ் (எ) பாஸ்கரன் 2 அல்லது வேறு படம் எடுத்தால் கண்டிப்பாக நான் உன்னுடன் இணைந்து நடிப்பேன் என்று, அந்த அளவிற்கு ஒரு உண்மையான நண்பன் ஆர்யா.

    சந்தானம் - ஆர்யா

    நான் காமெடியனாக இருக்கும் போதே என்னை ஹீரோ மாதிரி இருக்கணும் என்று அதிகம் ஊக்கப்படுத்துவார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். ஆர்யாவின் எந்த ஒரு படமாக இருந்தாலும் அங்கு என் அன்பும் ஆதரவும் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறினார்.

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன் 

    கேப்டன் 

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேப்டன் 

    கேப்டன் 

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் 'கேப்டன்' படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
    • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேப்டன்

    இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

    "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் "கைலா" பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்ததை அடுத்து தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிஷார் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    ×