search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "david miller"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
    • நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மோதின. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வி ரொம்ப வலிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

    இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்.

    என்று மில்லர் கூறினார்.

    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
    • இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    ரோகித் சர்மா மற்றும்  இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.

    யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
    • தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.  

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 416 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.

    ×