search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heinrich Klaasen"

    • ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின
    • தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்

    ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.

    தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
    • ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.

    இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ரன்களை குவித்தது ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருந்தது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.


     

    டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    அளவில் பெரிதாக காட்சியளிக்கும் சங்கிலி தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் அதன் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டீன் எல்கர் ஓய்வு அறிவித்தார்.
    • அந்த அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    கேப்டவுன்:

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து மேலும் ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

    அந்த அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து ஆடுவேன் என தெரிவித்துள்ளார்.

    32 வயதான ஹென்ரிச் கிளாசன் தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 104 ரன்கள் அடித்துள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

    ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டி காக் கடந்த 2021 டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது கிளாசனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்தது தென் ஆப்பிரிக்கா.
    • தென் ஆப்பிரிக்கா வீரர் கிளாசன் அதிரடியாக ஆடி 174 ரன்கள் குவித்தார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

    ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 416 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.

    ×