search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvAUS"

    • நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார்.
    • ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் - பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

     

    ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார்.

    இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர கேசவ் மகாராஜ், தப்ரிஸ் சம்சி மற்றும் யன்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • தென் ஆப்பிரிக்கா வீரர் டிகாக் 109 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.


    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் - பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

    இதனையத்து மார்க்ரம் - கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும் கிளாசன் 29 ரன்னில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் பீல்டிங் சற்று மோசமாக இருந்தது. 48 ஓவரில் இரண்டு கேட்ச் மிஸ் செய்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் மார்க்ரம் 93 ரன்னும், டேவிட் மில்லர் 63 ரன்னும், ஜேன்சன் 47 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 3 விக்கெட்டும், அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது.

    டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், மகராஜ் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது ஜேன்சனுக்கும், தொடர் நாயகன் விருது மார்க்ரமுக்கும் வழங்கப்பட்டது.

    • ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்தது தென் ஆப்பிரிக்கா.
    • தென் ஆப்பிரிக்கா வீரர் கிளாசன் அதிரடியாக ஆடி 174 ரன்கள் குவித்தார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

    ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 416 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.

    • இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
    • தென்ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்கம் 102 ரன்களையும், துவக்க வீரர் டி காக் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

    பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அவுட் ஆன விதம் அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவர் 78 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் ஓடும்போது தனது காலில் இருந்த ஷூ நழுவியதால் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எதிர் முனையில் உள்ள கிரீசை தொட முடியாமல் ரன் அவுட்டாகி பரிதாபமான முறையில் வெளியேறினார்.

    இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    அவர் ஆட்டமிழந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இறுதியில் தோல்வியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 338 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. மார்கரம் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். மார்க்ரம் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் 82 ரன்னும், பவுமா 57 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், மிட்செல் மார்ஷ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் ஜெரால்டு கொயட்சி 4 விக்கெட்டும், சம்ஷி, மகராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆட்ட நாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 392 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பர்க்

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் மற்றும் லபுசேன் இருவரும் சதமடித்து அசத்தினர். லபுசேன் 124 ரன்னும், வார்னர் 106 ரன்னும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட், ஹோஸ் இங்லிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்க சார்பில் சம்ஷி 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

    அந்த அணியின் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் தலா 49 ரன்னும், கேப்டன் பவுமா 46 ரன்னும், டி காக் 45 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 41.5 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது லபுசேனுக்கு வழங்கப்பட்டது.

    • 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.
    • அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

    புளோம்பாண்டீன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஆட்டம் புளோம்பாண்டீன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் (16.3 ஓவர்) தத்தளித்தது.

    இதற்கிடையே, 3-வது வரிசையில் களம் கண்ட கேமரூன் கிரீனுக்கு (0) வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா வீசிய 'பவுன்சர்' பந்து ஹெல்மெட்டோடு இடது காதோரம் பலமாக தாக்கியது. இதனால் வீக்கம் ஏற்பட்டு தலைக்குள் அதிர்வை சந்தித்ததால், வெளியே அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு அளிப்பது என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து பந்து தலையில் தாக்கினால் மாற்று வீரரை சேர்க்கும் விதிப்படி கேமரூன் கிரீனுக்கு பதிலாக மார்னஸ் லபுஸ்சேன் சேர்க்கப்பட்டார்.

    8-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேனும், ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகரும் கைகோர்த்து அணியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றினர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா 40.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. லபுஸ்சேன் 80 ரன்களுடனும் (93 பந்து, 8 பவுண்டரி), ஆஷ்டன் அகர் 48 ரன்களுடனும் (69 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    லபுஸ்சேன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் லபுஸ்சேன் தற்போது தனது பூர்விக அணியை அதுவும் மாற்று வீரராக நுழைந்து தோற்கடித்து அசத்தி இருக்கிறார்.

    இந்த தொடருக்கான அணியில் முதலில் லபுஸ்சேன் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்டீவன் சுமித் காயத்தால் விலகியதால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தாயின் ஆசை நிறைவேறியதாக லபுஸ்சேன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முந்தைய நாள் இரவு எனது தாயார் என்னிடம் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக நீ விளையாடுவாய் என்று கூறினார். அதற்கு நான், 'களம் காணும் அணியில் எனக்கு இடமில்லையே' என்று கூறியதும் மிகவும் வருந்தினார். முதல் பாதியில் நான் விளையாடாவிட்டாலும் கூட அவர் ஸ்டேடியத்தில் அமர்ந்து ஆட்டம் முழுவதையும் கண்டுகளித்தார். எதிர்பாராத விதமாக எனது அம்மாவின் ஆசைப்படி நானும் விளையாடும் வாய்ப்பை பெற்று விட்டேன். உண்மையில் எனது உணர்வை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நீக்கப்பட்ட போது, நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த 10-12 ஒரு நாள் போட்டிகளில் நான் போதுமான அளவுக்கு ரன் எடுக்கவில்லை. அணி தேர்வாளர்களிடம், 'ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறினேன். அத்துடன் இன்னும் பேட்டிங்கில் மிடில் வரிசையில் இருக்க விரும்புவதாகவும் சொன்னேன். அணியைவிட்டு வெளியே இருக்கும் சமயத்தில், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

    2-வது ஆட்டம் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பவுமா 142 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கோ ஜான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர்.

    தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லபுசேன் 80 ரன்னும், ஆஷ்டன் அகார் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 190 ரன்களை சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 191 ரன்களை எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும், டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டது. ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 49 ரன்களில்ஆட்டமிழந்தார். பவுமா 35 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட், நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டும், பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் அவுட்டானார். மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 30 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய அபாட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    ×