search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது டி20 போட்டியிலும் வெற்றி - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
    X

    2வது டி20 போட்டியிலும் வெற்றி - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 49 ரன்களில்ஆட்டமிழந்தார். பவுமா 35 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட், நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டும், பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் அவுட்டானார். மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 30 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய அபாட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    Next Story
    ×