என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அதிரடி சதம்.. சேவாக்கின் 23 ஆண்டுகால சாதனையை முறியடித்த டேவிட் மில்லர்
- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் சதம் விளாசினார்.
- மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்துள்ளார்.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடின.
இதில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் தனி ஆளாக போராடினார். அவர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். மில்லர் சதம் அடித்தபோதும், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்த போட்டியில், அணியின் தோல்வியால் மில்லர் அடித்த சதம் வீணானது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். கொழும்புவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது, 77 பந்துகளில் சதம் அடித்த சேவாக்கின் சாதனை முறியடிக்கப்பட்டது.
23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் மில்லர் விரைவாக சதம் அடித்து உள்ளார். இந்த தொடரில், மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.