என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரேயாஸ் ஐயர்"
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார்.
- பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதும் உதவினார்.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் குவித்தார்.
- நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல்போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஒரு நபருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கை ஓட்டுபவர் இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.
- மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.

வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.
கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
- ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள்.
- ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைக்காததால் இவர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள். அவர் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் இலக்கு ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார். ஏனெனில் டெல்லிக்கு இப்போது கேப்டன் தேவை. ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணியும் ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தி ஸ்ரேயாஸ் அய்யரை எடுக்க முயற்சிக்கலாம்' என்றார்.