என் மலர்
நீங்கள் தேடியது "ICC Player of the Month for July"
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார்.
- பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதும் உதவினார்.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம் பிடித்துள்ள்னர்.
- ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய வீராங்கனைகள் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.
அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.