search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Player of the Month"

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
    • இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது ஐசிசி.
    • செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், சிராஜ் மற்றும் மலானைப் பின்னுக்குத் தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதேபோல, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.

    ×