search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subman Gill"

    • முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.
    • 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலியும் 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஷர்துல் தாகூரும் தட்டிச் சென்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து அந்த போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் போது அனைத்து வீரர்களும் கலாய்த்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ரியாக்ஷன் வேர லெவலில் இருந்தது.

    கேஎல் ராகுல் பீல்டராக சிறப்பாக செயல்பட்டாலும் கீப்பிங் என்று வரும் போது அவர் சுமாராகவே செயல்படுவார். அதனால் கூட அனைவரும் கலாய்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது ஐசிசி.
    • செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், சிராஜ் மற்றும் மலானைப் பின்னுக்குத் தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதேபோல, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.
    • அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடவில்லை.

    சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.

    அங்கு அவர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் இந்திய அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் வெளியேறுவார். அவர் 2 போட்டியில் விளையாடி 47 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
    • ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பனிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக ஹர்த்திக் இருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தெரிவித்தன.

    ×