என் மலர்
நீங்கள் தேடியது "SLvIND"
- ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
- காயம் காரணமாக விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. தனது உடல்திறனை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
ஆனால், முதுகு வலி காரணமாக ரஞ்சி போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ-க்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார். அவரது தலைமையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. அதன்பின் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
அதன்பின் ஜூலை 2-வது வாரத்திற்குப் பிறகு இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
முன்னணி வீரர்கள் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இணைய வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு கவுதம கம்பீர் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
- இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தொடர்வார்.
புதுடெல்லி:
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி20-யின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை வெளியானது.
- ஜூலை 26-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அட்டவணை வெளியானது.
முதல் டி20 போட்டி வரும் 26-ம் தேதியும், 2-வது டி20 போட்டி வரும் 27-ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 29-ம் தேதியும் நடக்கவுள்ளது.
இதேபோல், ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வனிந்து ஹசரங்கா டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளை துறந்து ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை இலங்கை எப்போதும் கொண்டிருக்கும், நான் எப்போதும் போல் எனது அணி மற்றும் தலைமைக்கு ஆதரவளிப்பேன் என ஹசரங்கா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பல்லகெலேயில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல் 2-வது, 3-வது 20 ஓவர் போட்டியும் ஒருநாள் தள்ளிபோடப்பட்டு முறையே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-வது, 3-வது ஒருநாள் போட்டி ஏற்கனவே அறிவித்தபடி முறையே ஆகஸ்டு 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்பில் அரங்கேறுகிறது.
- இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.
ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
டி20 அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
- ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
- சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.
நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 அணி விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
- இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
- சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி:
சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி:
ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
- நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
- இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது.
இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேப்டன் பொறுப்பை குறித்து சூரியகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி.
கடந்த வாரங்களில் நடந்தது கனவுபோல் இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார்.
- சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
- ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.
ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் கலந்து கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றனர். காலை 11.40 மணியளவில் இலங்கை புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் மாலை 4.50 மணியளவில் இலங்கையில் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.
இதில் கவுதம் காம்பீர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ரவி பிஷ்னோய், சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 தொடர் அட்டவணை:-
ஜூலை 26: இலங்கை - இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 28: இலங்கை - இந்தியா 2-வது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 30: இலங்கை - இந்தியா 3-வது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஒருநாள் தொடர் அட்டவணை:
ஆகஸ்ட் 02: இலங்கை - இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 04: இலங்கை - இந்தியா 2-வது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 07: இலங்கை - இந்தியா 3-வது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு