search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wanindu Hasaranga"

    • அவர் தற்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொழும்பு:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் ஆடி வந்த அவர் தற்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை ஹரங்கா தவறவிடுவார் என தெரிகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

    தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 96 ரன்களில் சுருண்டது.
    • இலங்கையின் ஹசரங்கா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கையில் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இலங்கை போராடி வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே இலங்கை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, இலங்கை வீரர் ஹசரங்காவின் அபாரமாக பந்து வீசினார். இதனால் ஜிம்பாப்வே அணி 22.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டு எடுத்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அடுத்து ஆடிய இலங்கை 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை கோப்பையை வென்று அசத்தியது. கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.

    • ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட ஹசரங்கா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால் அடுத்த வரும் தொடர்களில் அவரை காணலாம். அடுத்த மாதம் ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வர உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியின் டி20 கேப்டனாக வனிந்து ஹசரங்காவும் ஒருநாள் கேப்டனாக குசல் மெண்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

    • ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பாகிஸ்தான் லீக் தொடரில் இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா இடம்பெறவில்லை.

    ஹசரங்காவும் விந்தியா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.


    ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாக, பாகிஸ்தான் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தமான ஹசரங்கா, இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.     

    ×