என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் கிரிக்கெட் போட்டி"

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இறுதி நாளான இன்று விளையாடிய இங்கிலாந்து அணி 68.1 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 271 ரன்களே எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை ஹரங்கா தவறவிடுவார் என தெரிகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ×