search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gautham Gambhir"

    • 2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
    • உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த யுவராஜை பாராட்டாதது ஏன் என கம்பீர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. கபில்தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவரது தலைமையிலான அணி சொந்த மண்ணில் 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான அவர் 362 ரன்கள் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி னார்.

    இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்.

    யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்பு குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

    நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டு கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் பிராண்டாக மாறிவிடுவார்.

    இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக மாறி உள்ளது.

    முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் போட்டியின்போது காம்பீருக்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் யுவராஜ்சிங்குக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை என்று காம்பீர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைப்பவர் கவுதம் கம்பீர்.
    • கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது என கம்பீர் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

    அதிலும் இவர் டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பீர் ஆச்சர்யமாக கோலியை பாராட்டியுள்ளார்.

    அதில் "கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது. முதல் 10 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடியும், கடைசி 10 ஓவர்களில் அதிரடியாகவும் விளையாடியும் ஆட்டத்தின் முக்கிய நாயகனாகியுள்ளார்" எனக் கூறியுள்ளார்.

    பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். #GauthamGambhir #LoksabhaElections2019
    புதுடெல்லி:

    பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

    கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

    அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

    டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு ரூ.24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு ரூ.4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு ரூ.20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.


    தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் ரூ.1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு ரூ.4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் நிஜாமுதின் பகுதியில் ரூ.1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GauthamGambhir #LoksabhaElections2019
    ×