என் மலர்
நீங்கள் தேடியது "ஒருநாள் தொடர்"
- 2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
- அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.
2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.
டி20 உலகக் கோப்பையை வென்ற அதே நாளில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகிய 3 பேரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வெற்றி பெற்ற கையோடு அவர்கள் மூவரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த தொடரில் இருந்து பொறுப்பேற்றார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒருநாள் தொடரை இந்தியா 0-2 (3) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2024-ம் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 2024-ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979-க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.
இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது.
முந்தைய ஒருநாள் தொடரில் இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா, டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார்.
- வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
BANGLADESH FROM 132/3 TO 143/10. ??pic.twitter.com/4jsJ8fQ6af
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2024
தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியினர் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷாண்டோ 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் வெளியேறினர். 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டும், காசன்ஃபர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குல்பதீன் நயீப் 34 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 25 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.
ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
- 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.
- இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- அந்த அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.
மும்பை:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.
காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இந்த அணிக்கு ரோகித் தலைமை தாங்குகிறார். இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அப்போது இடம்பெறவில்லை.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.