search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whitewash"

    வரும் பொங்கலுக்குள் அனைத்து பள்ளிகளும் தூய்மை செய்து வெள்ளை அடிக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவையான நிதி உதவியை நாங்கள் செய்து வருகிறோம் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற அந்த நிதிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் தலா 30,000, 50,000 என அந்தப் பள்ளிகளின் நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வருகிறோம்.

    அப்படி உயர்த்தி தொடரும் நிதியை வைத்துக் கொண்டு துப்புரவு பணியாளர்களை தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது எதிர்காலத்தில் பள்ளி கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

    மாணவர்களின் கழிப்பிடம் சுகாதாரமாக இருக்க இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன அதில் 82 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். எனவே பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய முடியும்.



    பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து 4 நாட்கள் முன்பு முதல்வர் ஒரு கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 2000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ 7,500 சம்பளத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அதற்கான பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் காலிப் பணியிடம் என்று எதிர்காலத்தில் இருக்காது. இது மட்டுமல்ல மகப்பேறுக்கு 9 மாத விடுமுறைக்கு செல்லும் பெண் ஆசிரியைகளுக்கு பதிலாக அந்த விடுப்பில் கூட தற்காலிகமாக இந்த ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை செய்யும் வகையில் வெள்ளையடித்து தரப்படும். இதற்காக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 1500 கோடி ரூபாயில் மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ள 102 கோடி ரூபாய் போக மீதியுள்ள தொகை பெறுவதற்காக நான் மத்திய மந்திரியை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை ஒயிட்-வாஷ் செய்தது. #AUSvENG #ENGvAUS

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. டிராவிஸ் ஹெட் 56 ரன்களும், அலெக்ஸ் கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மோயீன் அலி 4 விக்கெட்களும், சாம் குர்ரன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.


    நான்கு விக்கெட் வீழ்த்திய மோயீன் அலி 

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அகார் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார். 

    பேர்ஸ்டோவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட் 1 ரன்னிலும், இயான் மார்கன் டக்-அவுட்டும் ஆகினர். ஹேல்ஸ் 20 ரன்னில் ஆட்டமிந்தார். இதனால் 50 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்தது. அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்முனையில் களமிறங்கியவர்கள் சொதப்பினர்.

    மோயின் அலி 16 ரன்களிலும், சாம் குர்ரன் 15 ரன்களிலும், லியாம் பிளங்கீட் கோல்டன் டக்-அவுட்டும் ஆகினர். அப்போது 29.4 ஓவரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிதானமாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்தார். மற்றொரு முனையில் அடில் ரஷித் விக்கெட் விழாமல் பார்த்துகொண்டார்.


    சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோஸ் பட்லர்

    சிறப்பாக பேட்டிங் செய்துவந்த ரஷித் 47 பந்தில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய பட்லர் சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகள் அவரது ஆறாவது சதமாகும். இறுதியில் இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பட்லர் 110 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் பில்லி ஸ்டான்லேக், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா முன்று விக்கெட்களும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றிபெற செய்த பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்திலும் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை ஒயிட்-வாஷ் செய்தது. #AUSvENG #ENGvAUS
    ×