என் மலர்
நீங்கள் தேடியது "கேசவ் மகாராஜ்"
- முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
- கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.
- மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
- மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கெய்ன்ஸ்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.
இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.
மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
- இதில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
சென்னை:
உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷகீல், பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து போராடி வென்றது. மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் கேசவ் மகராஜ்-க்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.
திருவனந்தபுரம்:
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்
இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.






