என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து தெ. ஆப்பிரிக்கா வீரர் மகராஜ் விலகல்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து தெ. ஆப்பிரிக்கா வீரர் மகராஜ் விலகல்

    • முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் கேசவ் மகராஜ்-க்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Next Story
    ×