என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    7 விக்கெட் வீழ்த்திய கேசவ் மகாராஜ்: பாகிஸ்தான் அணி 333 ரன்னில் ஆல்அவுட்
    X

    7 விக்கெட் வீழ்த்திய கேசவ் மகாராஜ்: பாகிஸ்தான் அணி 333 ரன்னில் 'ஆல்அவுட்'

    • முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
    • கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×