search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one day series"

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.5 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிபட்சமாக அந்த அணியின் சிகந்தர் ரசா 38 ரன்கள் அடித்தார். ஆப்கான் தரப்பில் அதிபட்சமாக ரசித்கான் 3 விக்கெட்களையும், பரூக்கி, நபி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    பின்னர் களம் இறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. அதிபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்கள் அடித்தார். முகமத் நபி 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

    ஜிம்பாப்பே அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×