என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாயகன் மீண்டும் வரார்.. சுப்மன் கில்லுக்கு பந்து வீசி பயிற்சி எடுத்த முகமது சமி
- பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
- முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி 11 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தியிருந்தார்.
முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






