என் மலர்

  நீங்கள் தேடியது "England World Cup"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

  கடைசியாக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

  இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.  12-வது உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

  46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் நுழைந்தன.

  போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும்.

  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.  ‘லீக்’ ஆட்டம் ஜூலை 6-ந்தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி (1-வது இடம் பிடிக்கும் அணி VS 4-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 9-ந்தேதியும், 2-வது அரைஇறுதி (2-வது இடம் பிடிக்கும் அணி - 3-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 11-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந்தேதியும் நடக்கிறது.

  லண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா நடக்கிறது. முதல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து- டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

  இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.

  1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் 3-வது தடவையாகவும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளன.

  கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இதுவரை உலகக்கோப்பையை வென்றது இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை நடத்துவதால் முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்துக்கு காத்திருக்கின்றன.  போட்டி அமைப்பு முறை சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருப்பதால் முன்னணி அணிகள் அரைஇறுதியில் நுழைவதில் சவால் இருக்கலாம். வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

  ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் மீண்டும் கோப்பையை வெல்லுமா? சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.

  ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால், அந்த அணி சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
  இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதுவரை உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பைக்குப்பின் அணியை வலுவாக கட்டமைத்தது. கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது.

  அந்த அணி ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜாப்ரா ஆர்சர், மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

  பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக பீல்டிங் பயிற்சி மேற்கொண்டபோது அந்த அணியின் கேப்டன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

  நேற்றைய போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்த ஜாப்ரா ஆர்சர் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப்பின் மீண்டும் களம் இறங்கினார். இருவரும் தொடர்ச்சியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் இங்கிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலின் தோல் கிழிந்தது. நேற்று ஒரேநாளில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

  மார்க் வுட்டுக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இலேசான காயமாக இருந்தால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆர்சருக்கு லேசான காயம்தான். அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துக்குழு தெரிவித்துள்ளது. 15 பேரில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
  உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

   அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

   மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

  263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.  மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி  74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி  34, சாட்ரன் 1, ரன்கள் அடித்திருந்தனர். நைப் 2 மற்றும் ரஷித் கான் 5 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

  பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டும் சடப் கான், முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் நல்லவிதமாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறேன் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
  ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். தற்போது தடை முடிந்துள்ளதால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

  உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஷஸ் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். மேலும், இங்கிலாந்து ரசிகர்களும் கேலி கிண்டல் செய்வார்கள்.

  ஆஷஸ் தொடரின்போது பால் டேம்பரிங் விவகாரத்தை வைத்து இருவரையும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘அவர்களை மிகுந்த அளிவில் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தொடரை சந்தோசமாக விளையாட வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், அது வேடிக்கையாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். நாம் மனிதர்கள். நமக்கு உணர்வுகள் இருக்கிறது.

  அவர்கள் சிறந்த மக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் நல்லவிதமாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை பற்றி பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

  இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.

  உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கு முன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.

  அப்போது விராட் கோலி கூறுகையில் ‘‘நீங்கள் ஏராளமான வகைகளில் இருந்து உத்வேகத்தை பெறலாம். ஆனால், ஒரு விஷயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது மிகப்பெரியது. இந்திய ராணுவத்தை பற்றி பேசும்போது, அதைவிட சிறந்த உத்வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தைப் பற்றி பேசும்போது, அதனுடன் வேறு எதையும் ஒப்பிட இயலாது.

  இதே உத்வேகத்துடன் நாம் சென்றால், ராணுவத்திற்காக ஏதாவது செய்ய முடியும். உயர்ந்த நிலை பேரார்வத்தை உங்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். ஆனால், இதுவெல்லாம் ஏராளமான மற்ற காரணிகளையும் சார்ந்துள்ளது. உலகக்கோப்பையில் விளையாடும்போது ஒவ்வொரு வீரர்களுக்கு தனிப்பட்ட உத்வேகம் இருக்கும். ஒவ்வொருவரும் ராணுவத்தை மனதில் நினைத்தால், அதன்மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்’’ என்றார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரரான பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஜெப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
  உலகக்கோப்பை தொடர் குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தாம்சன் கூறியதாவது:-

  இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

  மேலும் விதவிதமான பந்துவீச்சை மாற்றி வீசுகிறார். அவரது பந்துவீசும் முறை கணிக்க முடியாத அளவில் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சரியாக கவனித்தனர் என்று நான் பார்க்கவில்லை.

  பும்ராவுடன் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவும் கவனிக்கப்படக் கூடியவர். அவரும் சிறப்பான நிலையில் உள்ளார்.  அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

  அவர் மட்டும் நன்றாக பந்துவீச ஆரம்பித்துவிட்டால் அவர்தான் உலகிலேயே மற்றவர்களைவிட சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார். அதற்கு அவர் வேகத்தை கூட்ட வேண்டும். அதேவேளையில் சரியான அளவிலும் பந்துவீச வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
  50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

  சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தில் நடைபெற இருப்பது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லாய்டு தெரிவித்துள்ளார்.
  50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் சாதிக்க ஒவ்வொரு அணியும் தீவிரமாக உள்ளன. இதற்கிடையே உலகக்கோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு கூறியதாவது:-

  உலகக்கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இது பந்து வீச்சாளர்களுக்கு சிறிய போராட்டத்தை அளிக்கும். இந்த உலக கோப்பை ஆல்-ரவுண்டர்களுக்கான போட்டி தொடராக இருக்கும் என்று கருதுகிறேன்.

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணியிலும் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இதனால்தான் ஆல்-ரவுண்டருக்கான உலகக்கோப்பை போட்டி என்று நம்புகிறேன்.

  இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடும் என்று நானும் நம்புகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீசின் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் சிறந்த வீரர்கள் பலரை இழந்து இருக்கிறோம். தற்போது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.  கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த அணி சம பலத்துடன் இருக்கிறது. அவர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கிளைவ் லாய்ட்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 1975, 1979-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றது. 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்துள்ளார்.
  வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதாகும் இவர் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடியுள்ள இவருக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற இருக்கும் உலகக்கோப்பை ஐந்தாவது தொடராகும்.

  பொதுவாக கிறிஸ் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்கள் எடுக்க வேகமாக ஓடமாட்டார். மேலும் அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய இயலாது.  கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் கெய்ல் ஜிம்மை தவிர்த்து யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.

  ஜம்மை தவிர்ப்பதாலும், போட்டிகளுக்கு இடையில் அதிக அளவில் ஓய்வு எடுப்பதாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்எஸ் டோனி அணியில் இருப்பது எனது மனதில் உதிக்கும் சிந்தனைகளை சுதந்திரமாக செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  விராட் கோலி தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை சந்திக்க இருக்கிறது. எம்எஸ் டோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். விராட் கோலி கேப்டன் குறித்து விமர்சனம் பெருகி வரும் நிலையில், டோனி குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது.

  டோனி குறித்த விமர்சனத்திற்கு அவ்வப்போது விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அணியில் இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் டோனியை பற்றி என்ன கூற முடியும்?. அவரது தலைமையில்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. கடந்த சில வருடங்களாக அவரை நான் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரும் அப்படித்தான்.

  டோனியைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், எந்தவொரு விஷயத்தையும் விட அணி உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதுமே அணியை பற்றிதான் எங்கள் எண்ணங்கள் இருக்கும். வேறு எந்த விஷயமும் இல்லை.

  அவர் அனுபவத்தை எங்களுக்கு பகிர்ந்தளிப்பார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கூட அவரது சில ஸ்டம்பிங், போட்டியின் திருப்பத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.  டோனி மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது. நியாயமாக சொல்ல வேண்டுமென்றால், விமர்சனம் செய்பவர்களுக்கு பொறுமை சற்று குறைவு என நினைக்கிறேன். அவர் மீதான விமர்சனம் முடிவில்லாமல் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எம்எஸ் டோனி கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்.

  ஸ்டம்பிற்கு பின்னால் விக்கெட் கீப்பராக பணியாற்றும் அவர், விலைமதிப்பற்றவர். என்னுடைய எண்ணங்களை சுதந்திரமாக செயல்படுத்த அவர் உதவி செய்கிறார். டோனியை போன்ற அனுபவமிக்க ஒருவர் இருப்பது சிறப்பானது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்புகிறேன் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட். பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான இவருக்கு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜைல் ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியபோது, இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

  கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய ஹிசில்வுட், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், உலகக்கோப்பை நடைபெறும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேிதி வரையிலான நாட்களை ஆஷஸ் தொடருக்கு பயன்படுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. உலகக்கோப்பை நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். கடந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.  உலகக்கோப்பை நடக்கும்பொழுது நான் டிவி-யில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் சற்று வருத்தத்தை கொடுக்கிறது. தொடரில் பாதியில் யாராவது ஒருவருக்கு காயம் அடைந்தால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

  உலகக்கோப்பை இடம்பெறாத நிலையில், மேலும் சில நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆஷஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin