என் மலர்
நீங்கள் தேடியது "Asif Ali"
- ஆசிஃப் அலி தற்பொழுது சர்கீட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆசிஃப் அலி. இவர் சமீபத்தில் நடித்த கிஷ்கிந்த காண்டம், ரேகசித்திரம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆசிஃப் அலி தற்பொழுது சர்கீட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இவருடன் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை திவ்ய பிரபா இதற்கு முன் நடித்த All We Imagine As Light சர்வதேச அள்வில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்கீட் படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது அதில் தம்பதிகளாக இருக்கும் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா அவர்களுக்கு ஆரன் என ஹைப்பர் ஆக்டிவ் மகன் இருக்கிறான்.. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவனை பார்த்துக் கொள்ள ஆசிஃப் அலியை வேலைக்கு எடுக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு, பந்தம், சண்டைகள் என படத்தின் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள Jeppu பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆரன் செய்யும் ஹைப்பர் விளையாட்டுதனத்தை காண்பிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது
- மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆசிஃப் அலி.
- சர்கீட் படத்தில் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆசிஃப் அலி. இவர் சமீபத்தில் நடித்த கிஷ்கிந்த காண்டம், ரேகசித்திரம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆசிஃப் அலி தற்பொழுது சர்கீத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இவருடன் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை திவ்ய பிரபா இதற்கு முன் நடித்த All We Imagine As Light சர்வதேச அள்வில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்கீத் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது அதில் தம்பதிகளாக இருக்கும் தீபக் பரம்பொல் மற்றும் திவ்ய பிரபா அவர்களுக்கு ஆரன் என ஹப்பர் ஆக்டிவ் மகன் இருக்கிறான்.. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவனை பார்த்துக் கொள்ள ஆசிஃப் அலியை வேலைக்கு எடுக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு, பந்தம், சண்டைகள் என படத்தின் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
- பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ந் தேதியன்று பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் அவர் 2-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.
பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிப் அலி சர்தாரி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- . திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு உலகம் முழுவது உள்ள மக்கள் இப்படத்தை பாராட்டினர். திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் ஓடிடியில் லெவல் கிராஸ் திரைப்படம் வெளியானது. இப்படமும் பலரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் மம்மூட்டி இன்று வெளியிட்டார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்பட காட்சிகள் பல இடத்தில் அதிகரித்துள்ளது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படக்குழுவை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "ரேகாசித்திரம் திரைப்படத்தை பார்த்தேன். நான் இப்படத்தை பற்றி எழுத நீண்டநாள் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. இப்படத்தில் மிகச்சிறந்த திரைக்கதையும் எழுத்தும் இருக்க்கிறது. அனஸ்வரா டார்லிங். உங்களுடைய திரைப்படங்களை எல்லாம் நான் பார்த்து வருகிறேன், இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ஆசிபீ உங்களுடைய எதார்த்தமான நடிப்பு அபாரமாகவுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள். நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் மிக திறமையாக நடிக்கிறீர்கள்.. படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 75கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படமே 2025 ஆம் ஆண்டில் வெளியான மலையாளம் திரைப்படங்களில் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது ஆகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாகிஸ்தான் வீரரும், ஆப்கானிஸ்தான் வீரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
துபாய்:
ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4-வது போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
இதற்கிடையே, இப்போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் 19-வது ஓவரை அந்த அணியின் பரீட் அகமது வீசினார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி களத்தில் இருந்தார். 18.5 ஓவரை வீசியபோது ஆசிப் அலி அவுட்டானார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் அகமது கொண்டாடியபோது, ஆட்டமிழந்த ஆசிப் அலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு வீரர்களின் வாக்குவாதத்தால் மைதானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அகமது ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
- ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது.
- எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும்.
ஷார்ஜா:
ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் வெளி யேறியது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியும், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமதுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதி கொண்டனர்.
19-வது ஓவரில் ஆசிப் அலி அவரது பந்தில் 'சிக்சர்' அடித்தார். இதனால் அவர் பரீத் அகமதுவை சீண்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஆசிப் அலி அவுட் ஆனதால் அவரை பரீத் அகமது சீண்டினார். விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் பரீத் அகமது ஆவேசமாக கத்தினார்.
அப்போது அவருக்கும், ஆசிப் அலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடிப்பது போன்ற நிலை உருவானது. பிரீத் அகமதுவை தனது பேட்டால் ஓங்கி அடிக்கும் வகையில் ஆசிப் அலி மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள், சக வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிப் அலிக்கு எஞ்சிய ஆசிய கோப்பை போட்டியில் தடை விதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைமை நிர்வாகி ஷபிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது. எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும். பந்து வீச்சாளருக்கு விக்கெட் கைப்பற்றியதை கொண்டாட உரிமை உண்டு. உடல் ரீதியான செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்.
10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.






