search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wahab Riaz"

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.

    இரட்டை ஆதாய சர்ச்சையால் சமீபத்தில் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முதல் பணியாக இருக்கும்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 237 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், உலகம் முழுக்க பிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    38 வயதான இடது கை பந்துவீச்சாளரான வாஹப் ரியாஸ் கடைசியாக 2020 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினார். இவர் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் சுமார் 237 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

     

    2008-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் பாகிஸ்தான் அணியில் வாஹப் அறிமுகமானார். 2011 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வாஹப் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதே போன்று 2015 உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

    முன்னதாக 2019 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாஹப், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஹப் அறிவித்து இருக்கிறார்.

    "சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கி விளையாடியது பெருமைக்குரிய விஷயம் ஆகும். இந்த பயணத்திற்கு முடிவு சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உணர்கிறான். புதிய பயணத்தை துவங்கும் வகையில் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட இருப்பதில் ஆவலோடு இருக்கிறேன். இதன் மூலம் தொடர்ந்து உலகளவில் சிறந்த வீரர்களுடன் விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்று வாஹப் ரியாஸ் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுடன் 2 போட்டி டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

    அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ×