search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Cup 2018"

    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுடன் 2 போட்டி டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

    அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டர்களை மாற்ற சொன்ன குல்தீப் யாதவுக்கு டோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    குல்தீப் யாதவின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. அவரது பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் டோனி பீல்டர்களையும் நிற்க வைத்தார்.

    ஆனாலும் குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை மாற்ற சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் டோனி சற்று கடுப்பாகி அவரை எச்சரித்தார்.



    “பவுலிங் போடப்பா. இல்லையென்றால் பவுலரை மாற்றி விடுவேன்” என்றார். டோனி இந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு இதே மாதிரி ஒருமுறை குல்தீப் யாதவை டோனி எச்சரித்து இருந்தார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள். #AsianCup2018
    மும்பை:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள்.

    முதுகு வலி பிரச்சினைக்கு மத்தியிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு, ஆசிய கிரிக்கெட்டில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மற்றும் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய அம்பத்தி ராயுடுவும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.  #AsianCup2018
    ×