என் மலர்

  நீங்கள் தேடியது "Pakistan Cricket Team"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதுவோம் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் மிகப்பெரியதாக கருதப்படும்.

  அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான். இரு அணி ரசிகர்களும் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக்கோப்பை போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 6 போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதும் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

  தொடர் தோல்விக்கு இந்த உலகக்கோப்பையில் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவை வீழ்த்துவதை போல் மற்ற அணிகளையும் வீழ்த்தி சாத்தியக்கூறு பாகிஸ்தான் அணியிடம் உள்ளது.  15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வது எளிது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது ஒன்றும் அப்படி அல்ல. ஏனென்றால், ஏகப்பட்ட நெருக்கடி உள்ளது. உதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், முகமது அமிர், ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி போன்ற வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.’’ என்றார்.

  உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். இதனால் இன்சமாம் உல் ஹக் மீது கடும் விமர்சனம் எழும்பியது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 கிரிக்கெட் தொடரில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. #SAvPAK
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வந்த அந்த அணி, ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

  பாகிஸ்தான் அணி கடந்த 10 தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் (இரண்டு முறை), உலக லெவன் அணி, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி வாகை சூடியிருந்தது. இது உலக சாதனையாகும்.

  இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.  நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

  ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

  ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

  குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

  சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

  பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.  2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.  நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

  கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் அணியின் 36 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #ShoaibMalik
  பாகிஸ்தான் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். 36 வயதான இவர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஃபிட்டாக இருந்தால் டி20 போட்டியில் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.  19 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 35.22 ஆகும். அத்துடன் 154 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன்கள் அடித்ததோடு ஓய்வு பெற்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய முன்னாள் வீரரின் தாமதத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் ஜிம்பாப்வே தொடரில் விளையாட செல்கிறது. #ZIMvPAK
  ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி முதல் ஜூலை 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் முடிந்த உடன் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

  இந்த தொடரின்போது பாகிஸ்தான் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்சன் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். ஸ்காட்லாந்திற்கு எதிரான டி20 தொடருடன் இவருடைய ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது. தனது பதவியை நீட்டிக்க விரும்பாமல் தனது சொந்த நாடானா ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டார்.


  டேரன் பெர்ரி

  அவருக்குப் பதிலாக தற்போது புதிதான டேரன் பெர்ரியை பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு சொந்த வேலை இருக்கிறது. அதனால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை வரை தன்னால் அணியில் இணைய முடியாது என்று கூறிவிட்டார். இனால் பாகிஸ்தான் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் செல்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2019-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ICCWorldCup
  இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன்பின் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

  இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையையும் பாகிஸ்தான் அணி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது, பாகிஸ்தான் அணி, தனது மீதான உறுதியை கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.  பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என்பதை என்னால் நியாயமான அளவிற்கு சொல்ல முடியும். நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

  இங்கிலாந்தில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மைதானத்திற்குச் சென்று சென்று அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆதராளவர்கள் அதிகமான அளவு மைதானத்திற்கு வருவதால் நெருக்கடி உருவாகும்’’ என்றார்.
  ×