search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னணி அணிகளை ஆட்டம் காண வைத்த ஆப்கானிஸ்தானுக்கு ஒரு சபாஷ்....
    X

    முன்னணி அணிகளை ஆட்டம் காண வைத்த ஆப்கானிஸ்தானுக்கு ஒரு சபாஷ்....

    ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.



    2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.



    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
    Next Story
    ×