என் மலர்
நீங்கள் தேடியது "ஒருநாள் தரவரிசை"
- ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
- இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
துபாய்:
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (669 புள்ளி 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.
அதிரடியாக சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 650 புள்ளியுடன் 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 616 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.
முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் நீடிக்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
- முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் மந்தனாவின் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
- டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடியது முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்த 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்தது ஸ்மிருதி மந்தனா முன்னிலை பெற உதவியது.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் இரண்டாவது இடமும், தென் ஆப்பிரிக்காவின் வால்வார்ட் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் தரவரிசை பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் உள்ளார்.
- பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
- நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்ததது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், உசாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
300 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஐசிசி ஆண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
- ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.
- .பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் டாப்-10 இடத்திற்குள் உள்ளார்.
துபாய்:
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பகர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா சார்பில் சிராஜ் 4வது இடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.
இதேபோல், டி20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார்.
- முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
- இதில் ரோகித் சர்மா சுப்மன் கில்லை தாண்டி 2-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 8வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஜடேஜா 16வது இடத்தில் உள்ளார்.
- நியூசிலாந்து பெண்கள் அணி இந்தியாவில் பயணம்செய்து ஒருநாள் தொடரில் விளையாடியது.
- இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.
துபாய்:
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடம் முன்னேறி 9-வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்திசர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேணுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32-வது இடத்திற்கு வந்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.
- ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்ததால் ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20 தரவரிசையில் 12வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ரோகித் சர்மாவை 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளார் சுப்மன் கில்.
- விராட் கோலி 4 இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.
இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது.
கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.

அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 3-வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் 10-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-ம் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.






