என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தார் ஸ்மிருதி மந்தனா
- முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் மந்தனாவின் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
- டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடியது முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்த 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்தது ஸ்மிருதி மந்தனா முன்னிலை பெற உதவியது.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் இரண்டாவது இடமும், தென் ஆப்பிரிக்காவின் வால்வார்ட் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் தரவரிசை பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் உள்ளார்.






